விடுமுறை நாளையொட்டி தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
பாவூர்சத்திரம், தென்காசி, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது.. இதனால் குற்றாலத்தில் உள்ள பழைய குற்றால அருவி, பேரருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. விடுமுறை தினத்தை கொண்டாடும் விதமாக குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.