வயநாடு மக்களுக்கு ராகுல் காந்தி துரோகம் இழைத்து விட்டதாக கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் விமர்சித்துள்ளார்.
2024 மக்களவை தேர்தலில் ரேபரேலி, வயநாடு ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றி பெற்றாா்.
ஒருவர் ஒரு தொகுதிக்கு மட்டுமே எம்.பி.யாகவோ அல்லது எம்எல்ஏவாகவோ இருக்க முடியும் என்பதால், வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வயநாடு மக்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ள அவர், தான் தினந்தோறும் அவதூறுகளைச் சந்தித்தபோது, வயநாடு மக்களின் அன்பே தன்னை பாதுகாத்ததாக கூறியுள்ளார். தஇது குறித்து விமர்சித்துள்ள கேரள பாஜக தலைவர் சுரேந்திரன், வயநாடு மக்களுக்கு ராகுல் காந்தி துரோகம் இழைத்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
இடைத்தேர்தலில் வயநாடு மக்கள் தங்களது முடிவை மறு பரிசீலனை செய்வார்கள் என்றும் சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.