கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மாநில கல்வி அமைச்சர் சிவன் குட்டியை கண்டித்து, கேரள மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவனந்தபுரம் மாவட்டத்தில் பதினோராவது வகுப்பு படிக்க உள்ள மாணவர்களுக்கு, அங்குள்ள பள்ளியில் போதிய இடங்கள் இல்லை எனவும், எனவே, இடப்பற்றாக்குறையை போக்கி, போதிய இடங்களை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மாணவர்கள் கல்வி அமைச்சரின் காரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.