ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரியில் ராணுவம் நடத்திய தாக்குதலில், தீவிரவாதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உரியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அங்கு ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ராணுவம் பதிலடி கொடுத்தது. இதில், தீவிரவாதி ஒருவர் பலியானதாகவும், தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.