டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-8 சுற்றில் அமெரிக்க அணியை இங்கிலாந்து வீழ்த்தியது.
டி20 உலகக்கோப்பைக்கான சூப்பர்-8 சுற்று நடைபெற்று வரும் நிலையில், இங்கிலாந்து – அமெரிக்க அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.
இதையடுத்து 116 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி 9.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 117 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.