திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
கிழவன்குளம் கண்மாயில் நடைபெற்ற இந்த திருவிழாவில் கோபால்பட்டி, சாணார்பட்டி, மேட்டுகடை, கொசவபட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
அப்போது பாப்லெட், குரவை, உள்ளிட்ட மீன்களை பொதுமக்கள் பிடித்து மகிழ்ந்தனர்.