ஜிஎஸ்டியால் ஏழை, எளிய சாமானிய மக்கள் அதிகம் பயனடைந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பின் வீட்டு உபயோக பொருட்கள் சாமானியர்கள் வாங்கும் விலையில் விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாஜக அரசு மேற்கொள்ளும் சீர் திருத்தங்கள் அனைத்தும் 140 கோடி இந்தியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் எனவும் அவர் உறுதி பட தெரிவித்துள்ளார்.