ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது.
ஹைதராபாத் விமான நிலையத்துக்கு காலை 7 மணியளவில் மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வந்து சோதனை நடத்தினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. சோதனையில் வெடிபொருட்கள் ஏதும் சிக்கவில்லை.
இதேபோல நாட்டின் பிற விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், சோதனையில் ஏதும் சிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.