தேனி அருகே தனுஷ்கோடி- கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் சாகசம் மேற்கொண்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரளா மாநிலம் மூணாறுக்கு செல்லும் தனுஷ்கோடி- கொச்சி தேசிய நெடுஞ்சாலை பல வளைவுகளை கொண்டதாகும்.
இந்த சாலையில் சுற்றுலா பயணிகள் அவ்வப்போது ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் இரண்டு கார்களில் தனுஷ்கோடி- கொச்சி சாலையில் சென்றுகொண்டிருந்த இளைஞர்கள், காரின் கண்ணாடியில் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ, இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.