டெல்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சந்தித்துப் பேசியுள்ளார்.
அப்போது வாரங்கலில் சைனிக் பள்ளி நிறுவுமாறு ராஜ்நாத் சிங்கிடம் அவர் வலியுறுத்தினார்.
மேலும் ஹைதராபாத்தில் சாலை மேம்பாட்டுப் பணிக்கு பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள நிலங்களை ஒதுக்கீடு செய்யுமாறு ராஜ்நாத் சிங்கிடம் ரேவந்த் ரெட்டி வேண்டுகோள் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.