அவசர நிலையை எதிர்த்த ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தியுள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“அவசர நிலையை எதிர்த்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து பெருமக்களுக்கும் இன்று மரியாதை செலுத்தும் நாளாகும்.
காங்கிரஸ் கட்சி எவ்வாறு அடிப்படை சுதந்திரத்தை சீர்குலைத்தது, ஒவ்வொரு இந்தியரும் பெரிதும் மதிக்கும் இந்திய அரசியல் சாசனத்தை எவ்வாறு காலில் போட்டு மிதித்தது என்பதை அவசர நிலையின் கருப்பு நாட்கள் #DarkDaysOfEmergency நமக்கு நினைவூட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
















