பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே மொபைல் போன் சார்ஜ் செய்தபோது மின்கசிவு ஏற்பட்டு 5ம் வகுப்பு சிறுமி உயிரிழந்தார்.
மேட்டுப்பாளையம் காலனி தெருவை சேர்ந்த சின்னசாமியின் மகள் நிகிதா ஸ்ரீ, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் வீட்டிலில் சிறுமி நிகிதா ஸ்ரீ, மொபைல் போனை சார்ஜ் செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்டு சிறுமி மீது மின்சாரம் பாய்ந்தததில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, உடலை கைபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.