“வருகிற 2026-ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமையும்” என ஸ்டார்ட் அப் பிரிவு மாநில தலைவர் விஸ்வை ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “கடந்த 1975ஆம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு வரையில் எமர்ஜென்சி முறையை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நடைமுறைப்படுத்தினார்” என்று குற்றம் சாட்டினார்.
மேலும், “தமிழகத்தில் தி.மு.க சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறது” என்றார். தொடர்ந்து பேசியவர், “தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் பாஜக 20 சதவீதம் வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளது” என பெருமிதம் தெரிவித்தார்.