புனே கார் விபத்தில் இருவர் பலியான வழக்கில், சம்பந்தப்பட்ட சிறுவனுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி தீர்ப்பளித்தது.
புனே கல்யாணி நகரில் சிறுவன் சொகுசு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில், இருவர் உயிரிழந்தனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட சிறுவனை போலீசார் கைது செய்தனர். மேலும், சிறுவனுக்கு பதிலாக தங்களது வீட்டு வாகன ஓட்டுநரை சிக்கவைக்க முயன்ற சிறுவனின் பெற்றோர், தாத்தா ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து வந்த சிறுவனுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமின் அளித்து உத்தரவிட்டுள்ளது.