“நாட்டில் காங்கிரஸ் அரசால் கடந்த 1975-ம் ஆண்டு அவசரநிலை அறிவிக்கப்பட்டதை கருப்பு தினமாக பாஜக அனுசரித்து வருகிறது” என அக்கட்சியின் மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “எமர்ஜென்சி காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளை எதிர்த்தது திமுகவும், பாஜகவும்தான்” எனக் கூறினார், “ஆனால், நெருக்கடி நிலையைக் கொண்டு வந்த காங்கிரசுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது” என்றும் வி.பி.துரைசாமி குற்றம் சாட்டினார்.