திருவாடனை அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்களே இல்லாததால், நோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில், பொது மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர், பல் மருத்துவர் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இருந்து பணி செய்ய வேண்டிய இடத்தில் ஒரு மருத்துவர் கூட இல்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், சிறு நோய்க்காக சிகிச்சை பெற வரும் நோயாளிகளை கூட ராமநாதபுரம், மதுரை, தேவகோட்டை போன்ற இடங்களுக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கும் அவலம் உள்ளது.
இதுகுறித்து மாவட்ட அதிகாரியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
எனவே போதிய மருத்துவர்களை மாவட்ட நிர்வாகம் விரைந்து நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.