கனடா இடைத்தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கனடாவில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், டொராண்டோ-செயின்ட் பால் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
லிபரல் கட்சி சார்பில் லெஸ்லி சர்ச்சும், கன்சர்வேடிவ் கட்சி சார்பில் டான் ஸ்டீவர்ட் ஆகியோர் வேட்பாளராக போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் லிபரல் கட்சி வேட்பாளர் லெஸ்லி சர்ச்சை 42 சதவீதம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து கன்சர்வேடிவ் வேட்பாளர் டான் ஸ்டீவர்ட் வெற்றி பெற்றார்.
இது குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இடைத்தேர்தல் முடிவு அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மக்கள் அளித்துள்ள முடிவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள அவர், நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக லிபரல் கட்சி கடுமையாக உழைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த இடைத்தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி வேட்பாளரான அம்ரித் பர்ஹரும் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.