போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின வாழ்த்துக்கள் எனத் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் கள்ளச்சாராயம் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் நமது சமூகத்திற்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் பரவி வரும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
போதைப்பொருள் இல்லாத சமுதாயத்திற்கான இந்த கூட்டுப் பணியில், அரசு சாரா அமைப்புகள் மற்றும் சிவில் சமூகங்களின் பங்கு, குறிப்பாக விழிப்புணர்வை பரப்புவதில், இன்றியமையாதது.
போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் கள்ளச்சாராயத்துக்கு எதிரான இந்த அறப்போராட்டத்தில் ஒன்றிணைந்து, நமது இளைஞர்களையும் மாநிலத்தையும் பாதுகாக்க, ஆரோக்கியமான, போதைப்பொருள் இல்லாத பாரதத்தை உருவாக்க மீண்டும் உறுதி கொள்வோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.