முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் கடந்த 1975-இல் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களவைத் தலைவர் தேர்தலுக்குப் பின்னர், அவசர நிலை விவகாரம் அவையில் பூதாகரமாக வெடித்தது. அவை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்ட பின்னர், வெளியே வந்த தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள், காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அவசர நிலையை கண்டித்து, கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரணாவத், தங்களது தந்தை மற்றும் பாட்டியின் பெயரை முன்னிலைப்படுத்திதான் காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரித்ததாகவும், அவர்களின் செயல்களுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பொறுப்பு ஏற்பார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.