நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக பீகாரில் கைதான இருவரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க பாட்னா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
நீட் தேர்வு வினாத்தாளை முன்கூட்டியே கசியவிட்டதாக பல்தேவ் குமார் மற்றும் முகேஷ் குமார் ஆகியோரை பீகாரில் போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.
நீட் முறைகேடு புகாரை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், கைதான இருவரையும் தங்களிடம் ஒப்படைக்கக் கோரி, பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கைதானவர்களை சிபிஐ காவலில் அனுமதித்து உத்தரவிட்டது.