ஈரோட்டில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்துகளின் கண்ணாடியை உடைத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சாணார் மேடு பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல தனது 4 பேருந்துகளை சோலார் – கரூர் செல்லும் சாலையில் நிறுத்தி வைத்துள்ளார்.
அப்போது நள்ளிரவில் அங்குவந்த மர்ம நபர்கள், வெங்கடேஷின் பேருந்து கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதுகுறித்து வெங்கடேஷ் புகாரளித்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.