கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பில்லூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு ஆயிரத்து 300 கன அடியாக உயர்ந்துள்ளது.
மேலும் அணை நீர்மட்டம் 94 அடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அணையில் இருந்து மின் உற்பத்திக்காக 6 ஆயிரம் கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.
கடந்த சில வாரங்களாக ஆற்றில் நீர்வரத்து குறைந்து வந்த நிலையில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.