குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் இன்று உரையாற்றுகிறார்.
18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமையன்று தொடங்கியது. முதல் 2 நாட்களில் புதிய எம்பிக்கள் பதவியேற்றனர். 3-வது நாளான நேற்று அவைத்தலைவர் தேர்வு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, மாநிலங்களவையின் 264-வது அமர்வு இன்று தொடங்குகிறது. அதேபோல் இரு அவைகளின் கூட்டுக் கூட்டமும் இன்று நடைபெறவுள்ளது.இதில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றவுள்ளார்.
பின்னர், இரு அவைகளிலும் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் தாக்கல் செய்யப்பட்டு,அதன் மீது விவாதம் நடைபெறும்.