கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கோரி சென்னை எழும்பூரில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தை முன் வைத்து சட்டப்பேரவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரியும், இவ்விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் பேச அனுமதி அளிக்காததைக் கண்டித்தும் சென்னை எழும்பூரிலுள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே, அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் என ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். பாதுகாப்பு கருதி அப்பகுதியில் 400-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.