மேட்டுப்பாளையம் அருகே கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மத்தம்பாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்த நிறை மாத கர்ப்பிணியான சவுமியாவுக்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து சவுமியாவின் கணவர் தமிழரசன், 108 ஆம்புலன்சை அழைத்துள்ளார். அப்போது அங்கு விரைந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், சவுமியாவுக்கு பிரசவ வலி அதிகமானதை அறிந்து வாகனத்திலேயே பிரசவம் பார்த்தனர். இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், ஆம்புலன்ஸ் ஊழியர்களை உறவினர்கள் பாராட்டினர்.