ஈரோட்டில் 50 அடி பள்ளத்தில் பைக்குடன் தவறி விழுந்த இளைஞர் நூலிழையில் உயிர் தப்பினார்.
ஈரோட்டில் இருந்து சென்னிமலை நோக்கி சர்வேஷ் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வாகனத்தில் மோதாமல் இருக்க வாகனத்தை வலது புறமாக திருப்பியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சர்வேஷின் இருசக்கர வாகனம் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர், சர்வேஷை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.