நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவதற்காக சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாரம்பரிய முறைப்படி பிரதமர் மோடியும் இரு அவைகளின் தலைவர்களும் உற்சாகமாக வரவேற்பளித்தனர்.
நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ராஷ்டிரபதி பவனில் இருந்து குதிரைப்படை அணி வகுப்புடன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி, மக்களவை தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு செங்கோல் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது.