தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள அரசு சிறுவர் சீர்த்திருத்த பள்ளி குழந்தைகளுக்கு வில்வித்தை பயிற்சி வழங்கப்பட்டது.
சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்ட குழந்தைகளின் வாழ்வை நல்வழிப்படுத்த சிறுவர் சீர்த்திருத்த பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு கூடைப்பந்து, கால்பந்து, சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சி வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஹைதராபாத்தில் உள்ள சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு வில்வித்தை பயிற்சி அளிக்கப்பட்டது.