கனமழை காரணமாக, கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சோலையார் அணை 100 அடியை எட்டியுள்ளது.
வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், அப்பகுதிகளில் உள்ள ஆழியார்ஆணை, சோலையார் அணை உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் 73 அடியாக இருந்த சோலையார் அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்துள்ளது. மேலும், இந்த அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.