திருச்சி மாவட்டம் கொள்ளிடம் பாலத்தின் தடுப்புச் சுவர் மீது ஏறி ஆபத்தை உணராமல் சிறுவன் ஒருவன் விளையாடும் வீடியோ இணைத்தில் வெளியாகியுள்ளது.
பாலத்தின் மீது ஏறிய சிறுவன், அங்குமிங்கும் நடமாடுவதுடன், ஆபத்தை உணராமல் உடற்பயிற்சி மேற்கொள்வது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே பாலத்தின் தடுப்புச் சுவர் மீது இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனம் ஓட்டிய வீடியோ வைரலான நிலையில் தற்போது இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.