நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவான கல்கி 2898 ஏடி படம் திரையரங்குகளில் வெளியானது.
பாகுபலி 2 படத்திற்குப் பிறகு பிரபாஸூக்கு பெரிய அளவில் வசூல் சாதனை செய்யும் படங்கள் அமையவில்லை. இதனைதொடர்ந்து கல்கி 2898 ஏடி படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் இந்தியத் திரையுலகத்தின் பெரும் நட்சத்திரங்களான அமிதாப், கமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தற்போது பான் இந்தியா படமாக இன்று கல்கி திரைப்படம் வெளியாகியுள்ளது.