புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கஞ்சா போதையில் இளைஞர்கள் தாக்கிக் கொண்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்நிலையில் அறந்தாங்கி கடைவீதியில் 4 இளைஞர்கள் கஞ்சா போதையில் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தப்பியோடிய இளைஞர்களை தேடி வருகின்றனர்.