வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
மெட்டுக்குளம் பகுதியில் ராஜ் பட்டேல் என்பவருக்கு சொந்தமான மரக்கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மின்கசிவு காரணமாக கடையில் தீவிபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.