கல்வியில் சிறந்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்! - நடிகர் விஜய்
Aug 10, 2026, 10:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கல்வியில் சிறந்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்! – நடிகர் விஜய்

Murugesan M by Murugesan M
Jun 28, 2024, 03:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் போதை பழக்கம் அதிகரித்துள்ளது கவலை அளிப்பதாக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

பிடித்த துறையை தேர்ந்தெடுத்து 100% முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் வெற்றி பெறலாம் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய்,  ரூ. 5000 ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதலிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பாராட்டு விழா சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளுக்கு, ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வைரம் மோதிரமும் வழங்கப்பட்டது.

முன்னதாக விழா மேடைக்கு வந்த விஜய் மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் சாதிய கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை அருகே அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

 இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய்,

எல்லா துறைகளும் நல்ல துறையே. நமக்கு பிடித்த துறைகளை தேர்ந்தெடுத்து 100 சதவீதம் உழைத்தால் வெற்றிதான்.

தமிழகத்திற்கு நல்ல தலைவர்களின் தேவை இருக்கிறது. தலைவர்கள் என்பது அரசியலில் மட்டும் சொல்லவில்லை. மாணவர்களான நீங்கள் செல்லும் துறைகளிலும் நல்ல தலைவர்கள் தேவை.

நல்லா படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். தலைவர்களாக வரவேண்டும். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. இது, ஒரு பெற்றோராகவும், அரசியல் இயக்க தலைவராகவும் எனக்கு அச்சமாக இருக்கிறது.

ஆளும் அரசு தவற விட்டுட்டாங்க அப்படின்னு சொல்ல நான் இங்க வரல, அதற்கான மேடையும் இது இல்ல. நண்பர்கள் யாராவது தவறான பாதையில் ஈடுபட்டால் அவர்களை திருத்த முயலுங்கள்.

தவறான பாதையில் யாரும் ஈடுபடாதீர்கள். நமது பாதுகாப்பை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். எந்த காரணத்திற்காகவும் உங்கள் அடையாளத்தை இழந்து விடாதீர்கள்” என்று தெரிவித்தார்.

Tags: The best in education should come to politics! - Vijay
Share
Tweet
SendShare
Previous Post

மரக்கடையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து!

Next Post

அரசு பேருந்து முறையாக இயக்கப்படாததால் மாணவர்கள் அவதி!

Related News

கைகொடுக்காத தென்மேற்கு பருவமழை – கைகொடுக்கும் கிருஷ்ணா நதிநீர்!

இபிஎஸ்-ஸின் தவறான முடிவால் கோடிகளை இழந்து 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் – எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு!

மேற்குவங்க மாநில முன்னாள் முதலமைச்சர் மமதா பானர்ஜியின் கார் மீது கற்களை வீசி தாக்குதல்!

பெங்களூருவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 105 பேர் கைது!

தேசிய கொடியை ஏந்தும் போது கட்சி பாகுபாடின்றி அனைவருக்கும் தேச உணர்வும், ஒரே சிந்தனையும் வரவேண்டும் – நயினர் நாகேந்திரன்

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜக செயற்குழு கூட்டம்!

ஏஐ. காரணமாக மென்பொருள் பொறியாளர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறி ; ஸ்ரீதர் வேம்பு

ஆபரேஷன் சிந்தூரில் நடந்தது என்ன? : தாக்குதல்களை முடிப்பதற்கு முன்பே போர்நிறுத்தத்திற்கு கெஞ்சிய பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பிறப்புரிமை குடியுரிமைக்கு தடை : புதிய உத்தரவு பிறப்பித்த ட்ரம்ப் : அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு கொடுக்கப்படும் பதவி லஞ்சமாகத்தான் கருதப்படும் – திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன்

மற்றொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம் : ஷேக் ஹசீனாவின் மகன் எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

ஆடி அமாவாசை – காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் குவியும் பக்தர்கள்!

மருந்து நிறுவனங்களிடம் இருந்து பரிசுப் பொருட்கள் அல்லது பண உதவிகளை மருத்துவர்கள் பெறக்கூடாது – சுகாதார அமைச்சகம் உத்தரவு!

கோவையில் நடைபெறும் சுதேசி கண்காட்சி 2026 – பார்வையாளர்களை கவர்ந்த ஆபரேஷன் சிந்தூர் புத்தக ஸ்டால்!

கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் ஆன்மிகத்தின் சிறப்பிடமாக புதுச்சேரி திகழ்கிறது – அமித் ஷா புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies