ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அரசு பேருந்து முறையாக இயக்கப்படாததால் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பொலவக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக குள்ளம்பாளையம் வழியாக பொலவக்காளிபாளையம் வரை இயக்கப்படும் அரசு பேருந்து முறையாக இயக்கபடுவதில்லை என கூறப்படுகிறது.
இதனால் மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாததால், போக்குவரத்துக் கழகம் உரிய நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.