கர்நாடக மாநிலம் குண்டனஹள்ளி சந்திப்பு அருகே லாரியின் மீது வேன் மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
எம்மேஹட்டி கிராமத்தைச் சேர்ந்த 17 பேர் ஆன்மீக சுற்றுலா சென்று விட்டு வேன் ஒன்றில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது குண்டனஹள்ளி சந்திப்பு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனளிக்காமல் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ள நிலையில் விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.