மயிலாடுதுறை மணிக்கூண்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
மயிலாடுதுறையின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றான மணிக்கூண்டில் வெடிகுண்டு வைத்ததாக காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு ஒருவர் மிரட்டல் விடுத்தார்.
இதனையடுத்து மணிக்கூண்டில் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது. பின்னர் வெடிகுண்டு மிரட்டல் பொய் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக செம்பதனிருப்பைச் சேர்ந்த சரவணன் என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்ததால் போலீசாரே சொந்த ஜாமினில் விடுவித்தனர்.