குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
குமரியில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக பேச்சிப்பாறை, பெருங்சாணி அணைகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது.
இதனையடுத்து அணைகளில் இருந்து கோதையாற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் திற்பரப்பு அருவியில் குளிக்க 2வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.