தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் விவகாரத்தில், உரிய தீர்வு காணப்படும் என மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் உறுதியளித்துள்ளார்.
நாகையைச் சேர்ந்த 10 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால், மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதாகவும், அவர்களை மீட்டு தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டதை இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக கூறிய அவர், இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அரசிடம் பேசி உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.