செங்கல்பட்டு அருகே போலீசாரை தாக்கி தப்பியோட முயன்ற கூலிப்படை தலைவன் சத்யாவை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கூலிப்படை தலைவன் சத்யா என்கின்ற சீழ்காழி சத்யா மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், நண்பரின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சத்யா செங்கல்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இதனை அறிந்த போலீசார், பழவேலி பகுதியில் இருந்த சத்யாவை மடக்கி பிடிக்க முயன்றனர்.
ஆனால் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற கூலிப்படைத் தலைவன் சத்யாவை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இதில், படுகாயமடைந்த சத்யாவை, மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.