தேசிய தேர்வு முகமையை மேம்படுத்த மாணவர்களும், பெற்றோரும் தங்களது பரிந்துரைகளை அளிக்கலாம் என உயர்நிலைக் குழு அழைப்பு விடுத்துள்ளது.
நீட் தேர்வு சர்ச்சையைத் தொடர்ந்து தேசிய தேர்வு முகமையை மேம்படுத்த முன்னாள் இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட உயர்நிலைக் குழு ஏற்படுத்தப்பட்டது.
இந்தக் குழுவானது விரிவான ஆய்வு செய்து, மத்திய கல்வி அமைச்சகத்திடம் 2 மாதத்தில் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது.
இந்த நிலையில், தேசிய தேர்வு முகமையை மேம்படுத்த மாணவர்களும், பெற்றோரும் ஜூன் 27 முதல் ஜூலை 7-ஆம் தேதி வரை MyGov என்ற வலைதளம் வாயிலாக தங்களது பரிந்துரைகளை அளிக்கலாம் என மத்திய கல்வித அமைச்சகம் தெரிவித்துள்ளது.