ஆந்திர மாநிலம், திருப்பதி மலைப்பாதையில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் பக்தர்கள் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என திருமலை தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பதி மலையில் இருந்து வாகனங்கள் செல்ல பயன்படுத்தப்படும் சாலையின் அருகே 15க்கும் மேற்கொண்ட யானைகள் முகாமிட்டது.
இதையடுத்து திருமலைக்கு செல்லும் பக்தர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு தேவஸ்தான நிர்வாகம் அறிவுறுத்தியது.