தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதையடுத்து அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியலிட்டனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அனுமதி வழங்கப்பட்டதையடுத்து குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் மெயினருவி, ஐந்தருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளித்து மகிழ்ந்தனர்.
















