பிரசித்தி பெற்ற அமா்நாத் யாத்திரை இன்று தொடங்கியது.
இமயமலையில் தெற்கு காஷ்மீரில் 3 ஆயிரத்து 880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகை கோயிலில், இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான யாத்திரை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் நிகழாண்டுக்கான அமர்நாத் யாத்திரை இன்று தொடங்கியது.
ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை 52 நாட்களுக்கு அமர்நாத் யாத்திரை செல்ல பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீரிலிருந்து முதல்கட்ட பயணம் இன்று தொடங்கியது.
அமர்நாத் யாத்திரையையொட்டி, மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.