தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மெத்தப்பட்டமைன் போதை பொருளை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஏ.புதுப்பட்டி பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர் அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாகனத்தில் 250 கிராம் கஞ்சா மற்றும் 30 பாக்கெட்டுகள் மெத்தப்பட்டமைன் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து காரில் இருந்த 3 பேரையும் கைது செய்த போலீசார், போதைப்பொருள்களை பறிமுதல் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.