தங்கள் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
மாணிக்கபுரம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் குடும்பம் உள்ளிட்ட 3 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற பாதிக்கப்பட்டவர்கள் திடீரென தீக்குளிக்க முயன்றனர். இதைக்கண்ட காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.