உலகிலேயே முதல்முறையாக டிஜிட்டல் கடல் சார் மற்றும் வினியோக தொடர்பு பாடத்தை கொண்ட எம்.பி.ஏ. படிப்பு சென்னை ஐ.ஐ.டி.யில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் நடைபெற்ற டிஜிட்டல் கடல் சார் மற்றும் விநியோக சங்கிலி பாடத்திட்டத்தில் எம்பிஏ படிப்பை சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி துவங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நவீன கடல்சார் மற்றும் வினியோக தொடர்பு தொழிலில் ஏற்படும் சிக்கல்களை கையாளும் வல்லுனர்கள் மற்றும் தொழில் முனைவோரின் நிபுணத்துவத்தை மேம்படுத்தும் வகையில் புதுமையான பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், டிஜிட்டல் தொழில்நுட்ப செயல்பாடுகளை மேம்படுத்துதல், அதனுடன் சார்ந்த வளர்ச்சியை அதிகரித்தல் தொடர்பான புரிதலை இதில் சேருபவர்களுக்கு அறிய செய்வதே தங்களுடைய குறிக்கோள் என்றும் காமகோடி தெரிவித்தார்.