திண்டுக்கல் மாவட்டம், பாலாறு அணை பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானைகளை படம் பிடிக்க வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள பாலாறு அணைப்பகுதிக்கு வந்து செல்லும் காட்டு யானைகளை, சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் யானைகளுக்கு இடையூறு செய்யும் விதமாக சுற்றுலாப் பயணிகள் நடந்து கொள்ளக்கூடாது எனவும், வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.