குஜராத் மாநிலம் ராஜ்கோட் விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்தது பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்கோட்டில் பெய்த மழையால் விமான நிலைய மேற்கூரையின் மீது தேங்கி நின்ற தண்ணீரை அகற்றும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. முன்னதாக டெல்லி சர்வதேச விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த நிலையில், குஜராத்திலும் அதே போன்ற சம்பவம் நடைபெற்றிருப்பது பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.