உத்தரகண்டில் பெய்த கனமழையால் வாகனங்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கனமழை காரணமாக ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.
அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகரில் 3 நாட்களாக பெய்த தொடர் மழையால், சிஆர்பிஎஃப் முகாம் அலுவலகத்தை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் சிஆர்பிஎஃப் அலுவலர்கள் அவதிக்குள்ளாகினர்.
டெல்லியில் மான்சிங் சாலை, சாஸ்திரி பவன், ஃபெரோஷா சாலையில் பரவலாக மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.